சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, கலவையான விமர்சனங்களோடு வெற்றிகரமாக ஓடி வரும் ‘அண்ணாத்த’ படம் குறித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய மகள் துவங்கிய hoote ஆப் மூலம் இந்த படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, கலவையான விமர்சனங்களோடு வெற்றிகரமாக ஓடி வரும் ‘அண்ணாத்த’ படம் குறித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய மகள் துவங்கிய hoote ஆப் மூலம் இந்த படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே ‘அண்ணாத்த’ படத்தை, பேரனுடன் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நிலையில்… திடீர் உடல்நல குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘அண்ணாத்த’ படம் எப்படி உருவானது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக தன்னுடைய குரல் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பதிவில் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம் ‘பேட்ட’ படம் முடிந்த போது நான் படத்தை பார்த்தேன், படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இதற்க்கு வெளியான காலா, கபாலி போன்ற படங்கள் ல கொஞ்சம் வயசான கேரக்ட்டர் பண்ணி இருந்தேன். ஆனால் ‘பேட்ட’ படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ரொம்ப ஸ்டைலிஷா… ரொம்ப அழகா காமிச்சு இருந்தாங்க ரொம்ப ஸ்டைலா படம் எடுத்திருந்தாங்க.
‘பேட்ட’ ரிலீஸ் ஆன அன்றைய தினமே, இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வெளியானது இரண்டு படமும் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு இரண்டு படங்களுக்கும் கிடைத்து கொண்டிருந்தது. அதனால் ‘விஸ்வாசம்’ படத்தை பார்க்க வேண்டும் என, அந்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் என்னுடைய நண்பர் என்பதால் அவரிடம் கூறி, இந்த படத்தை நான் பார்த்தேன். படம் அப்படியே போச்சு… நானும் இந்த படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் அளவிற்கு இந்த படத்தில் என்ன இருக்கு என யோசித்து கொண்டிருதேன். அப்படியே படம் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க படத்தோட கலரே சேங் ஆகி, கிளைமாக்ஸில் எனக்கு தெரியாமலேயே கை தட்டிட்டேன். உண்மையிலேயே எக்ஸலண்ட் படம் என புகழ்ந்து தள்ளியுள்ளார் ரஜினிகாந்த்.
பின்னர் இந்த படத்தை இயக்கிய சிவா-வை மீட் பண்ணி வாழ்த்து சொல்லவேண்டும் என நான் கூறியதை தொடர்ந்து சிவா தன்னுடைய வீட்டிற்கு வந்தார். அவர் அவ்வளவு பெரிய உடலை வைத்து கொண்டு ஒரு குழந்தை மாதிரி பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலேயும் உண்மை இருந்தது. எனவே அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. தன்னுடைய வாழ்த்துக்களை கூறிய பின்னர், எனக்கு ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா என கேட்டேன். அவர் உடனே உங்களுக்கு ஹிட் கொடுக்குறது ரொம்ப ஈஸி என கூறினார். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. யாருமே அப்படி சொல்லியதே இல்லை .
எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் என நான் கேட்ட போது, இரண்டு விஷயம் தான் சார்… நல்ல கதையில் நீங்கள் இருந்தாலே படம் சூப்பர் ஹிட் என கூறினார். இரண்டாவது நீங்க கிராமத்து வேடங்கள் நடித்து பல வருடம் ஆச்சு என கூறினார். அவர் சொன்ன விதமே எனக்கு பிடித்து விட்டதால், நல்ல கதை நீங்கள் கொண்டு வாங்க என கூறினேன். 15 முதல் 20 நாட்களில் கதை தயாராகி விட்டது என கூறினார். கதையை கூறுவதற்கு 2 1/2 மணி நேரம் ஆகும் என்றும், தனக்கு மூன்று பாட்டில் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டார். எல்லாம் தயாராகிவிட்டது. தண்ணியை குடித்து கொண்டே கதையை சொல்ல துவங்கினார்.
கதையை சொல்ல சொல்ல… அதிலும் கிளைமாக்சில் என்னை அறியாமலேயே கண்ணில் தண்ணீர் வந்து அழுது விட்டது. பின் அவர் கையை பிடித்து கொண்டு இதே போல் படம் எடுக்க வேண்டும் என கூறியதும், இதை விட சூப்பராக படத்தை எடுத்து விடலாம் என கூறினார். இந்த படம் உங்கள் ரசிகர்கள் மட்டும் இன்றி அணைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தை எடுக்கும் போது, பல பிரச்சனைகள் வந்தது, அவை அனைத்தையும் சிரித்து கொண்டே சமாளித்தார். அது குறித்து hoote ஆப்பில் நான் விரைவில் பேசுகிறேன் என தன்னுடைய அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.