ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா

by Column Editor

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாய்:

ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.

2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Related Posts

Leave a Comment