அக்ஷராவும், சிபியும் கமல் முன்னிலையில் சண்டைப்போட்டு கொண்ட முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ஆறு வாரங்களில் முதுகில் குத்தியவர்கள் யார் என்று போட்டியாளர்களிம் கமல் கேட்கிறார். அதற்கு முதலில் எழுந்த நிரூப், அபினய்தான் என் முதுகில் குத்தினார் என்றும், சகுனி என்று பட்டம்கூட கொடுத்திருந்தேன் என்று நிரூப் குற்றச்சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்கும் அபினய், கண்டிப்பாக நான் நிரூப்பைதான் சொல்வேன் என்றும், சகுனி என்று என்னை யாரும் பிக்பாஸ் வீட்டில் சொல்லமாட்டார்கள் என்று கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து பேசும் அக்ஷரா, முதுகில் குத்தியவர் யார் என்று கேட்டால் நிச்சயமாக நான் சொல்வது சிபியைதான். மனசுல எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டு என்னை முதுகில் குத்தினால் சிபி என்றார். இதை மறுத்து பேசும் சிபி, அக்ஷராவுக்கு கேப்டனாக தகுதி இல்லை என்பதால்தான் நான் அதை செய்தேன் என்று சொல்ல, உடனே நான் என்ன சொல்லி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
நீங்க என்ன பேசுறீங்க என்று சிபியிடம் அக்ஷரா வாக்குவாதம் செய்கிறார். கமல் முன்னிலையிலேயே நடந்த இந்த சண்டையை பார்த்த அவர், கோபமாகி சண்டையை நிறுத்தும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்க்கையில் கமல் நிச்சயமாக இன்று சாட்டையை சுழற்றவிருப்பதாகவே தெரிகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day42 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/84fF4RKkmm
— Vijay Television (@vijaytelevision) November 14, 2021