268
கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ‘கொரோனா தடுப்பூசிகளாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், உலக அளவில் 96 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும். நாட்டில் இதுவரை 109 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
“ஹர் கர் தஸ்தக்” என்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.