உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதி அன்று மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அன்று பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27வது மாநிலமாக உத்தரகாண்ட் உருவானது.
அன்று முதல், ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதி அன்று உத்தரகாண்ட் மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, உத்தரகாண்ட் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்,
உத்தரகாண்டில் மலை நீரும், இளைஞர்களின் விடாமுயற்சியும் ஆதாரமாக இருப்பதே மாநில வளர்ச்சிக்கு சான்றாகும். இயற்கையின் மடியில் உள்ள மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் முன்னேற விரும்புகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.