முகத்தில் மருக்கள் தோன்றுவதால் முகப்பொலிவு குறைவதாக கவலை ஏற்படுவது இயல்பான பிரச்சனையாகிவிட்டது. பலருக்கு முகம், கழுத்து அல்லது காதுகளுக்குப் பின்னால் மருக்கள் இருக்கும். மாசு மருவற்ற முகம் வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கிறது. உங்களுக்கும் மருக்கள் பிரச்சனையாக இருக்கிறதா?
மருக்களை தவிர்க்கும் சில சுலபமான வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்து பயனடையலாம். பலன் சற்று மெதுவாக கிடைத்தாலும், தீர்வு நிரந்தரமானதாக இருக்கும்.
ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வருவது நல்ல பலன் கிடைக்கும். அல்லது இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வரலாம். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இப்படி செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
அன்னாசிப் பழச்சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதேபோல, வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்து வரும் வழக்கத்தைப் பின்பற்றினாலும் மருக்கள் மாயமாய் காணமல் போகும்.