பிக் பாஸ் சீசன் 5 எபிசோடு முழுக்க முழுக்க தாமரையின் கண்டெண்ட்டால் மட்டுமே நகர்ந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் பாவனி மீது எல்லை மீறிய வார்த்தைகளை கொட்டிய தாமரையை கமல்ஹாசன் கண்டிக்க வேண்டும் என்பது சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் குரலாக ஒலிக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் 33 வது நாள் ரஜினியின் “நான்தாண்டா இனிமேலும் வந்து நின்னா தர்பாரு” பாடலுடன் நாள் ஆரம்பமானது. சொன்னப்போனால் நேற்று தான் அவர்களுக்கு தீபாவளி நவம்பர் 4. தீபாவளிக்கு ரஜினி படம் ரீலீஸ் ஆகியிருப்பதால் சிம்பாளிக்காக சூப்பர் ஸ்டார் பாடலை இசைத்தார் பிக் பாஸ். ஹவுஸ்மேட் ஆடி முடித்த பின்பு தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒருமுறை தீபாவளி வாழ்த்துக்களையும் கூறி அன்றைய நாளை தொடங்கினர். காலையிலேயே அக்கப்போரா?என்பது போல் டாஸ்க் தொடங்கியது. இதுவரை ஸ்பான்சர் டாஸ்க் தான் பார்த்து இருக்கிறோம், இது மூவி புரமோஷன் டாஸ்க். சசிகுமார் – சத்தியராஜின் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருப்பதால் அதற்கான புரமோஷன் டாஸ்க்.
தொழிலதிபர் நீருப்பிடம் தாமரை வேலை கேட்டார் போல. அதற்கு நீருப் உனக்கு ஏற்றார் போல் அங்கு வேலை இருக்காது என கூறியுள்ளார். அதை கேமிராவில் பதிவு செய்தார். ஆனால் அதையும் விளையாட்டாக மாறி ஸ்கோர் செய்தார் நிரூப். டாஸ்க் முடிந்த உடனே தாமரை – அபிநனவ் பேச்சு வார்த்தை தொடங்கியது. உலக அமைதி மாநாடு போல் பேச்சு நீண்டது. பாத்ரூமில் ஐக்கியின் ஷூவை வைத்துக் கொண்டு டைம் பாஸ் செய்து கொண்டிருந்தார் பிரியங்கா. வருண், நிரூப்பும் கொஞ்க நேரம் பிரியங்காவுடன் விளையாடி பொழுதை கழித்தனர். உயர்ந்த மனிதன் நிரூப் ஷூவை லைட் லேம்பில் வைக்க, அதை வருண் எடுத்துக் கொடுத்தார். அடுத்த சில மணி நேர்த்திலே “செண்பகமே செண்பகமே” டாஸ்க் தொடங்கியது.
டீம் பிரிப்பதிலே சிபி மற்றும் அக்ஷராவுக்குள் சண்டை வெடித்தது. வருணை முன்னிலைப்படுத்த அக்ஷரா விரும்புகிறார், தலைவர் பதவி பிறிக்கப்பட்டதால் கடுப்பில் இருக்கும் சிபி ஸ்கோர் செய்ய முயல்கிறார். இது டாஸ்கிலும் எதிரொலிக்கிறது. கடைசி வரை சிபியும் அக்ஷராவும் விட்டு கொடுக்காமல் அடித்து கொள்கிறார்கள். ஆரஞ்சு அணி, புளூ அணி மாறி மாறி அடித்துக் கொள்ள மாடும் சாய்கிறது. ஸ்ருதியின் விளையாட்டு ஆர்வம் தனியாக தெரிந்தது. அனைவரும் முழு ஈடுப்பாட்டுடன் டாஸ்கில் விளையாடினர். முதன்முறையாக பிக் பாஸ் 5 சீசனில் செண்பகமே செண்பகமே டாஸ்க் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடைசியில் ஆரஞ்சு அணியின் பால் கேன்கள் அதிகளவில் பறிபோயின. (பறிக்கப்பட்டன) இந்த கோபத்தில் தான் சிபி எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார்.
ஓவர் ஸ்மார்ட்டாக யோசித்த, ஐக்கி கடைசியில் டீம் தோற்க முக்கிய காரணம் ஆனார். பாலில் தண்ணீரை கலக்கும் பழைய டென்கிக். இந்த தகிடுத்தத்தம் வேலையை பார்க்கும் போது தான் பாவனிக்கும் தாமரைக்கும் குழாய் அடி சண்டை நிகழ்ந்தது. தாமரை ஆக்ஷனில் காட்டியதாக பாவனி சொன்னார். ஆனால் தாமரை நான் செய்யவில்லை என அழுத்தி அழுத்தி சொல்லி சண்டை போட்டார். பொய் சொல்ல மாட்டேன் என்றும் பொய் சொன்னால் கோபம் வரும் என்றும் அவரின் குரல் இருந்தது. பாவனி யதார்த்தமாக சொன்னதை தாமரை அவ்வளவு பில்டட் செய்ய வேண்டியதே இல்லை. அதற்காக பாவனியை அடிக்க கை நோக்கியது, மூஞ்சியை பாரு என்றெல்லாம் பேசுவது கட்பாடு அற்ற வார்த்தையை பயன்படுத்துவது என தாமரையின் அராஜகம் நீள்கிறது. கண்டிப்பாக கமல்ஹாசன் இதை கண்டிக்க வேண்டும். தாமரை எகுறுவதை பார்த்து பாவனியும் பதிலுக்கு பொம்பளையா நீ? என்றார். ஆனால் முதலில் பிள்ளையார் சுழி போட்டது தாமரை தான்.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, தாமரையின் செயலை யாரும் வீட்டில் கண்டிக்கவில்லை. பதிலுக்கு வருண், அக்ஷரா, ஐக்கி ஆகியோர் அழுது நடிக்கும் தாமரையை சமாதானம் செய்து கொண்டிருந்தனர். பாவனி செம்ம கடுப்பில் பாத்ரூமில் இருந்து கிளம்பினார். செண்பகமே செண்பகமே டாஸ்கில் கடைசியில் வருணின் புளூ அணி வெற்றி பெற்றது. ஆரஞ்சு அணி செய்த தண்ணீர் பால் மேட்டரையும் வருண் கண்டுப்பிடித்தார். வருண் அணியில் இருந்த 7 பேர், அக்ஷரா, பிரியங்கா,நிரூப், பாவனி, மதுமிதா, அபிநவ் அகியோட் அடுத்த வார தலைவர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
டாஸ்க் முடிந்த உடன், அக்ஷராவின் ஆட்டிடியூட் பற்றி சிபி, ராஜூ கார்டன் ஏரியாவில் பேசினர். ஆனால் வழக்கம் போல் தான் செய்வது தான் சரி என்றார் அக்ஷரா. வருண் வெர்ஸ் சிபி போட்டியில், வருண் வீட்டில் தலை தூக்க, அக்ஷரா வருணின் பக்கம் நின்று தேவையில்லாமல் சிபியிடம் சண்டை செய்வது தான் இத்தனைக்கும் காரணம். பாவனி வழக்கம் போல் தனது தோழிகளுடன் பெட்ரூமில் கொஞ்சி கொண்டிருந்தார். கடைசியாக தாமரையிடம் இனி பேசவே போவது இல்லை. ரொம்ப சீப்பாக நடந்து கொள்கிறார் என்றார். தாமரையின் இந்த அராஜகத்தை இன்று கண்டிப்பாரா கமல்ஹாசன்?
311
previous post