புரோட்டின் சிகிச்சைகள் ஸ்பாக்களில் செய்தாலும் வீட்டில் தயாரிக்கப்படும் புரோட்டின் ஹேர் பேக் உங்கள் கூந்தலை அழகாக காட்டும்.
தலைமுடி கெரட்டின் மற்றும் அமினோ அமிலங்களின் சங்கிலிகளால ஆனது. எளிமையான வகையில் புரதம் கடுமையான இராசாயனங்களின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் வெப்பம் மற்றும் மாசுபாட்டுடன் அடிக்கடி கூந்தல் தொடர்பு கொள்ளும் போது தலைமுடியில் இருக்கும் புரதத்தை உடைத்து உலர்ந்த உடையக்கூடிய மற்றும் சேதமடைந்ததாக உணரலாம்.
இது நிகழும் போது தலைமுடியை மீட்டெடுக்க இழந்ததை கொடுப்பதுதான். இதற்கு முட்டை மட்டுமே போதுமானதாக இருக்கும். எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
கூந்தலுக்கு புரதம்
கூந்தலுக்கு புரதம் தேவை என்னும் போது முடி வறண்டு , கடினமாக சேதமாக இருக்கும். தலைமுடி நீரிழப்புடன் இருக்கலாம் மற்றும் கண்டிஷனிங் தேவை. தலைமுடி மெல்லியதாக இருப்பதையும், அதை கழுவும் போது உடைவதையும் நீங்கள் கவனித்தால் முடிக்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.
முட்டை தயிர், மயோனைச், அவகேடோ மற்றும் தேங்கய்ப்பால் ஆகியவை புரதச்சத்து நிறைந்த ஆதாரங்கள். அற்புதமான புரதம் நிறைந்த ஹேர் பேக் வகைகளில் முட்டையை கொண்டு செய்யப்படும் இரண்டு விதமான ஃபேஸ் பேக் இங்கு பார்க்கலாம்.
முட்டை தயிர் ஹேர் பேக் – வறண்ட முடிக்கு
முட்டைகளில் புரதம் நிரம்பியுள்ளது. இது தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தயிர் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக் நிறைந்துள்ளன. இவை இரண்டும் தலைமுடியை மென்மையாக வைத்திருக்கும்.
முட்டை – 1
தயிர் – 2 டீஸ்பூன்
கிண்ணத்தில் முட்டை மற்றும் தயிர் மென்மையான பேஸ்ட் வரை கலக்கவும். வறண்ட முடிக்கு மஞ்சள் கரு பயன்படுத்தலாம்.
வெள்ளைக்கருவை எண்ணெய் பசைக்கு பயன்படுத்தலாம். இதை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை இதை செய்யலாம். முடி மென்மையான பிறகு வாரம் ஒரு முறை செய்யலாம்.
முட்டை தேன் ஹேர் பேக் – முடி உதிர்தலுக்கு
தலைமுடிக்கு ஈரப்பதம் மற்றும் புரதம் குறைவாக இருந்தால் இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவும். முட்டை உங்கள் தலைமுடிக்கு தேவையான புரதத்தை அளிக்கிறது. பாதாம் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளன. இது தலைமுடியை மென்மையாக்க உதவும். தேன் தலைமுடியை நிலைநிறுத்துகிறது. பொடுகு மற்றும் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.
முட்டையின் மஞ்சள் கரு – 1
தேன் – 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கும் வரை கலக்கி எடுக்கவும். இதை கூந்தலில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசி எடுக்கவும். இந்த பேக் வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
வறண்ட கூந்தலை கொண்டிருப்பவர்களுக்கு இவை பெரிதும் உதவும். எண்ணெய் பசை இருப்பவர்கள் இந்த பேக் பயன்படுத்த வேண்டாம். இந்த பேக் போடும் போது 20 நிமிடங்களுக்கு மேல் வைக்க வேண்டாம். தேன் சேர்ப்பதால் அது முடியின் நிறத்தை ஒளிர செய்யலாம்.
முட்டை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது முட்டையின் வாடை வரசெய்யும். வாடை போக அதிகமாக ஷாம்பு பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக முட்டை கலவையில் நறுமண எண்ணெய் சேர்க்கலாம். தலைகுளியலுக்கு பிறகு கஞ்சி தண்ணீர் கொண்டு அலசி எடுக்கலாம். தேங்காய்ப்பால் கண்டிஷனராக பயன்படுத்தலாம். இது முட்டை வாடையை வெகுவாக குறைக்கும்.