இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ இடங்களுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையால் கடந்த திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மறுத்தேர்வு நடத்தக்கோரி மும்பையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில்லை சிக்கல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவு தேர்வை சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர்.
இதனால் பல லட்சக்கணக்காண மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் அக்டோபர் 28 அன்று உச்சநீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது.
இந்த தேர்வு முடிவில் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா மூன்று பேர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் டெல்லியில் இருந்து தலா இருவர் மற்றும் கேரளா,
மேற்கு வங்காளம், பீகார், ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் முதல் 20 இடங்களை மேற்கண்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தக்க வைத்துள்ளனர்.
நீட் யூஜி தேர்வு என்பது என்ன?
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுர்வேதம் இளங்கலை, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, மற்றும் பிஎஸ்சி (செவிலியர்) படிப்புகளுக்கான தகுதித் தேர்வாகும்.
மருத்துவ நுழைவுத் தேர்வுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தனிதனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு அதை நீட் தேர்வு என பெயரிட்டு தேர்வை நடத்த தொடங்கியது.
இந்த ஆண்டு NEET-UG தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 8,70,074 விண்ணப்பதாரர்கள் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்,
1,544,275 பேர் தேர்வெழுதினர், 1,614,777 பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எதிராக. 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 1.77 லட்சம் பேர் கூடுதலாக தேர்வெழுதினர்.
மேலும், 2019 மற்றும் 2020 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இந்த தேர்வில் 15 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்த தேர்ச்சி பெற்றவர்களில் பெண்கள் 56.8 சதவீதமாகவும் உள்ளது.
முதல் 20 இடங்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வைஷ்ணவி சர்தா மற்றும் கார்த்திகா ஜி ஆகியோர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
இதில் 13.12 சதவீதம் எஸ்சி பிரிவினரும் , 45.6 சதவீதம் ஓபிசி மற்றும் 4.61 சதவீதம் எஸ்டி பிரிவினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேசிய தேர்வு முகமை மாநில வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை இருப்பினும், முதல் 20 இடங்களை உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா மூன்று பேர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் டெல்லியில் இருந்து தலா இருவர்,
கேரளா, மேற்கு வங்காளம், பீகார், ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் இருந்து தலா ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆனால் தமிழகத்தில் இருந்து யாரும் முதல் 20 இடங்களில் இடம் பெறவில்லை.
முதல் முறையாக வெளிநாட்டு மையங்களான குவைத் மற்றும் துபாய் உட்பட 3,858 மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.
கடந்த ஆண்டு 878 மற்றும் 2019 இல் 687 பேர் பெற்றிருந்த நிலையில், 883 வெளிநாட்டு தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மிருணாள் குட்டேரி (தெலுங்கானா), தன்மய் குப்தா (டெல்லி) மற்றும் கார்த்திகா ஜி நாயர் (மகாராஷ்டிரா) ஆகிய மூன்று பேர் 720 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
இருப்பினும், ஒட்டுமொத்த தகுதி மதிப்பெண்கள், 2020 உடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சரிவைக் காட்டியுள்ளன.
பொதுப் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு 138 ஆகவும், 2020 இல் 147 ஆகவும் இருந்தது. எஸ்டி, எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவுகளில், கட்-ஆஃப் 108, கடந்த ஆண்டின் 113க்கு எதிராக. பொது/EWS PwDக்கான கட் ஆஃப்கள் 2020ல் 129க்கு எதிராக 122 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை, தேர்வு நடத்துவதற்கும் முடிவுகளை அறிவிப்பதற்கும் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் இன்றளவும் பின் தங்கியே நிலையிலேய இருந்து வருவது இந்த விளக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.