நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோர் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க , தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் , பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒளியாய் இருப்பது தெய்வம் , தீப வெளிச்சத்தில் தெய்வத்தைக் காண்பதும், கண்டு தொழுவதும் தொன்றுதொட்டு வருகின்ற பரபு, நாகாகரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ் செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துள்பத்திற்கு ஆளாக்கினான். நினமே தீபாவளி திருநாளாகக் அக்கொடியவனை திருமால் அழித்த கொண்டாடப்படுகிறத . தீபைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இளிப்புகளை பரிமாறி உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இந்த தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோது தூய வழியில், அனைவருக்கும் எங்களது இனிய திபாலனி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தமிழக மக்களுக்கு தனது தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு மதத்தினர் பண்டிகைகளைக் கொண்டாடும் போது மற்ற மதத்தினர் வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து கொள்வது நம் நாட்டின் கலாச்சாரம். இதில் தீபாவளிக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 19 மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்த தீபாவளித் திருநாள் நல்வழிகாட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம். அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும் அதர்மம் அழிந்து தர்மம் நிலைக்க தீபாவளித் திருநாள் பாதை அமைத்து கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக அடித்தளமாக தீபாவளி திருநாள் அமையட்டும். தீமை மறைந்து நன்மை பெருகும் என்று நம்பிக்கையோடு ஏழை மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் தீமைகளை ஒன்றுசேர்ந்து ஒழித்துக் கட்டுவோம் என இந்நாளில் சபதம் ஏற்போம். அறியாமை என்னும் இருளைப் போக்கி வெற்றியையும் மகிழ்ச்சியையும் தீபாவளி கொண்டு வரட்டும். அனைவரும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்நாள் வழங்கட்டும். ஓராண்டுக்கும் மேலாக பொருளாதார சீரழிவு, வேலை இழப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு என பல அவதாரங்களை எடுத்து மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கு முடிவுகட்டும் நாளாக தீபாவளி அமையட்டும். அனைவரும் வாழ்க்கையிலும் இன்முகம் ஒளிரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.