சரும வறட்சியை போக்கும் பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி

by Editor News

ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது.

காபி விதைகள் முகத்தின் மந்தமான மற்றும் உயிரற்ற தோலை இல்லாமல் செய்து ஒரு சிறந்த வழியை உருவாக்குகிறது. ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, உங்கள் முகத்தில் பூசி வர உங்கள் முகத்தின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தரும்.

தேன் ஒரு தேக்கரண்டி, காபி விதை ஐந்து டீஸ்பூன் மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகம் மற்றும் கழுத்து வரை பூசி 30 நிமிடங்கள் கழிந்து நீரில் கழுவினால் ஒளிரும் சருமத்தை பெறலாம். இவ்வாறு 1 வாரத்தில் இருமுறை செய்து வர நல்ல மாற்றம் கிடைக்கும்.

குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

Related Posts

Leave a Comment