ராகி உப்புமா…

by Editor News

ராகி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
ராகி மாவு – 1 கப்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
முந்திரி – 10
இஞ்சி – சின்ன துண்டு
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 4 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத் தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ராகி உப்புமா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்கு சூடானதும், அதில் எடுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

அவை நன்கு வதங்கிய பிறகு இப்போது அதில் எடுத்து வைத்த பெருங்காயத்தூளை லேசாக சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் உங்கள் சுவைக்கேற்ப முப்பையும் சேர்க்கவும்.வெங்காயம் நன்கு வெந்ததும் அதில் எடுத்து வைத்த ரவையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். ரவை நன்கு வதங்கியதும் அதில் எடுத்து வைத்த ராகி மாவையும் சேர்த்து கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதில் எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறி விடுங்கள். ராகி மாவு நன்கு வேக பாத்திரத்தை ஒரு மூடி போட்டு மூடி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து உப்புமாவை நன்கு கிளறி விடுங்கள். பிறகு மீண்டும் மூடி வைத்துவிட்டு. மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் இப்போது சத்தான ராகி உப்புமா ரெடி!!!

Related Posts

Leave a Comment