இயற்கையாகவே நமது தலை முடி மற்றும் சருமம் பொலிவோடு இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம்.
அதாவது முகத்தின் நிறம் மாநிறமாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும், சிவப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் அழகு குறைவதில்லை.
ஆனால் முகத்தில் தோன்றும் சிறு குறைபாடுகள் கூட அழகை குறைத்து காட்டும். குறிப்பாக கரும்புள்ளிகள்.கழுத்தில் கருமை,கரு வளையம், இவை அனைத்தும் வருவதை உணர்ந்ததும் அவை மேலும் வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும்.
அப்படியே அதை போக்கவும் உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை செய்தாலே பலன் கிடைக்கும் என்று நினைக்கவேண்டாம். இயற்கை வழியில் முயற்சிக்கும் போது நிச்சயம் பொறுமை காக்க வேண்டும். ஆனால் பலனும் உண்டு.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும்.
முதலில் கரும்புள்ளிகள் நீங்க தேவையான பொருட்கள் பால் மற்றும் உளுந்து இவை இரண்டும் மட்டுமே ஆகும். இவை இரண்டும் நமக்கு வீட்டிலேயே கிடைக்கும் பொருட்கள் ஆகும்.
காலையில் உளுந்து பருப்பை முகத்திற்கு தேவையான அளவு எடுத்து அதனை பாலில் கலந்து ஊறவைத்து விட வேண்டும். பிறகு மாலையில் அதனை நன்கு பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
மேலும் இந்த பேஸ்டை தடவி வந்தால் கழுத்தில் கீழ் உள்ள கருமை,கரு வளையம் ஆகியவை சரியாகி முகம் கூடுதல் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும்.