2024 -25 ஆம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பில் சேர கடந்த மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக கடந்த ஜூன் 10,11 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 93 ஆயிரத்து 853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது.
ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
BE., B.Tech படிப்புகளில் சேர 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 2,09,645 மாணவர்கள் கட்டணம் செலுத்தியும், 1,93, 853 மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றமும் செய்துள்ளனர்.