நாள்பட்ட இருமலை குணப்படுத்தும் கொய்யா இலை…

by Editor News

அலர்ஜி, தொற்று அல்லது சுற்றுச்சூழல் மாசுபாடு என இருமல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. கடுமையான இருமல் இருந்தால் சில சமயங்களில் சுவாசிப்பதற்கு கூட சிரமமாக இருக்கும். நமது இந்திய குடும்பங்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக நம் தாய்மார்களும் பாட்டியும் தங்கள் கைவசம் உள்ள வீட்டு வைத்திய முறைகளை கூறுவார்கள்.

அது நமக்கு உடனடியான நிவாரணத்தை தரக்கூடியதாக இருக்கும். அது போல்தான் பல நூற்றாண்டுகளாக இருமலை குணமாக்க கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை உள்ளது. இவை அனைத்திற்கும் இருமலை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எசென்ஷியல் ஆயில், நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படும் பீனோலிக் கலவைகள் என பல்வேறு பயோ ஆக்டிவ் கலவைகள் கொய்யா இலையில் உள்ளது. கொய்யா இலையில் உள்ள மைகோலிக் பண்புகள் நுரையீரல் பாதையில் உள்ள சளியை அகற்றி இருமலை குறைக்கிறது. கொய்யா இலையை எப்படி டயட்டில் சேர்த்துக்கொள்வது?

இருமலுக்கு மட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் கொய்யா இலை உதவுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கொய்யா இலையை நம் டயட்டில் சேர்த்துக்கொள்வதற்கான சில வழிகள் இதோ…

கொய்யா இலை டீ :கையளவு கொய்யா இலைகளை எடுத்து அதை சுடுநீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய நீரில் சுவைக்காக கொஞ்சமாக தேன் அல்லது லெமன் கலந்து இதை குடிக்க வேண்டும். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உதவும்.

சமையலில் கொய்யா இலை : கொய்யா இலை டீ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதை சூப்பிலோ அல்லது வறுத்த உணவுகளோடோ சேர்த்து சாப்பிடலாம்.

நேரடியாக சாப்பிடலாம் : கொய்யா இலையை அப்படியே நேரடியாக கூட மென்று சாப்பிடலாம். கொய்யா இலையை சுத்தமாக கழுவி வெறு வயிற்றில் சாப்பிட வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலையை சாப்பிட்டால் இருமல் குணமாகும். கொய்யா இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிடலாமா என்பது குறித்து போதுமான ஆய்வுகள் செய்யப்படவில்லை. அதேப்போல் ஒரு சிலருக்கு கொய்யாஅ இலையும் பழமும் அலர்ஜியை உண்டாக்கும். ஆகவே உங்கள் டயட்டில் கொய்ய இலையை சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கொய்யா இலையை அளவாகவே உண்ண வேண்டும். கொய்யா இலையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அரிப்பு, குமட்டல், வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட கூடும்.

Related Posts

Leave a Comment