சைக்கிள் ஓட்டும்போது இதயத்துடிப்பு சீராகும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற உடல்நல பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.
இதனால், இதய வலுவிழப்பு, ஹார்ட் அட்டாக், மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்கு சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த பயிற்சி என்றே சொல்லலாம். ஏனென்றால், சைக்கிள் ஓட்டுவதால் ஒரு மணி நேரத்தில் உடலில் சுமார் 1,200 கலோரிகளை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் செயல்பாடு இல்லாததே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே, தினமும் குறைந்த 30 நிமிடங்களாகவது சைக்கிள் ஓட்டும்போது, உடலில் இருக்கும் குளுகோஸ் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் டைப் -1, டைப் -2 நீரழிவு நோயையை கட்டுக்குள் வைக்கலாம்.
அதிகமாக சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், தொடைப்பகுதி தசைகள், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும். மேலும், காலை நேரத்தில் சைக்கிள் ஓட்டும்போது, உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறது. இதனால் நாள் முழுக்க சோர்வு இல்லாமல் எனர்ஜெட்டிக்காக இருக்கலாம்.