ராகி புட்டு ரெசிபி இதோ!

by Editor News

ராகி புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 3 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி (துருவியது)
தண்ணீர் – தேவையான அளவு
சர்க்கரை
அவித்த பாசி பயறு
வாழைப்பழம்

செய்முறை:

ராகி புட்டு செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு புட்டுப்படத்திற்கு ஏற்றவாறு மாவை கலந்து கொள்ளுங்கள். முக்கியமாக, தண்ணீர் அதிகமாக ஊற்றிவிடக் கூடாது, அதுபோல மிகுந்த வறட்சியாகவும் இருக்கக் கூடாது.

இதனை அடுத்து புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்க விடுங்கள். பின்னர் புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில் முதலில் சிறிதளவு புட்டு மாவு சேர்த்து போடுங்கள். அதன் பிறகு துருவிய தேங்காயையும் போடுங்கள். மறுபடியும் புட்டு மாவை போட்டு குழாய் நிரம்பும் வரை தொடர்ந்து இப்படியே செய்யுங்கள். பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் ராகி புட்டு ரெடி!!

பிறகு அதை ஒரு தட்டில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் சர்க்கரை, அவித்த பாசி பயறு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்..

Related Posts

Leave a Comment