நடிக்க வருவதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் எதிர்கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை…

by Editor News

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினியின் மகன் க்ரிஷ் கண் ஆபரேஷனுக்காக சென்னை வர முத்து-மீனாவால் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்கள்.

இதனால் விஜயா செம கடுப்பில் இருக்கிறார், ரோஹினியும் அவர்களை எப்படியாவது வெளியே அனுப்பிவிட வேண்டும் என போராடுகிறார். ஆனால் முத்து-மீனா க்ரிஷ் கண் சரியாகும் வரை அவர்களை அனுப்புவதாக இல்லை.

க்ரிஷ் ஆசைப்பட்டபடி அவர் கண் திறக்கும் போது அவரது அம்மா ரோஹினியை தான் முதலில் பார்க்கிறார். மருத்துவமனையில் ரோஹினி க்ரிஷ்ஷை கட்டிப்பிடித்து கொண்டு இருப்பதை மீனா பார்க்கிறார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.

இந்த தொடரில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தா, இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எனது வீட்டில் பெரிய எதிர்ப்புக்கு பிறகு தான் நடிக்க வந்தேன். நான் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது ஒரு தொடருக்கான ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது ஒரு பிரபலம் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் ஓகேவா என கேட்க, அதற்கு ப்ரீத்தா அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு அந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூற, அதற்கு அந்த பிரபலம் அப்போ நீ எதற்கு நடிக்க வர அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியலன்னா நீ நடிக்கிறதுக்கு தகுதியே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து வேறொரு தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வான ப்ரீத்தா இப்போது தொடர்ந்து சீரியல்கள் நடிக்கிறார்.

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

Related Posts

Leave a Comment