பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
குறித்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், குணசேகரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கதிர், ஞானம் இருவரும் அடுத்தடுத்து குணசேகரனுக்கு ஆதரவாகவும், மனைவிக்கு எதிராகவும் நின்று வருகின்றனர்.
மீண்டும் கதிர் மற்றும் ஞானம் அண்ணனுக்கு சப்போட்டாக மாறியதுடன், மனைவி குழந்தைகளை எதிர்த்து நிற்கின்றனர்.
தற்போது கூண்டில் நிறுத்தப்பட்ட குணசேகரனுக்கு எதிராக பலரும் சாட்சி கூறி வருகின்றனர். நிறைவு பகுதி வாரத்தில் என்ன நடக்க இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.