தேவையான பொருட்கள்
சிக்கன் மரினேட் செய்ய தேவையானவை
சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தே.கரண்டி
கரம் மசாலா – 1 தே.கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 தே.கரண்டி
தயிர் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
குழம்பு செய்ய தேவையானவை
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
எண்ணெய் – 2 தே.கரண்டி
இலவங்கப்பட்டை – 1
கிராம்பு – 3
நட்சத்திர சோம்பு – 1
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சுமார் 30 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்த்து சிவக்கும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் பொன்நிறமாக மாறியதும் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மரினேட் செய்த சிக்கனை போட்டு 5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிட வேண்டும். சிக்கன் துண்டுகள் நன்றாக வதங்கிய பின்னர் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.
குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்ததன் பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஹைதராபாத் சிக்கன் குழம்பு தயார்.