113
ஐஸ்லாந்தின் புதிய ஜனாதிபதியாக ஹல்லா தோமஸ் டோட்டிர்(Halla Tomasdottir)தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில் 34.6 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக 55 வயதான ஹல்லா தோமஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட , 48 வயதான கட்ரின் ஜோகோப்ஸ்டோட்டிர் (Katrin Jakobsdottir) 25.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கடந்த 1980ம் ஆண்டு ”விக்டிஸ் பின்னபோகாடோட்டிர்” என்பவர் ஐஸ்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.