இந்த 6 பிரச்சினை உங்களுக்கு இருந்தா நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிட கூடாது!

by Editor News

ஆரஞ்சு பழம் நல்ல புளிப்பு சுவையும் மெல்லிய இனிப்புச் சுவையும் கலந்து இருக்கும். கிட்டதட்ட 80 சதவீதத்துக்கும் மேல் இதில் நீர்ச்சத்தும் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தி வெயில் கால நோய்த் தொற்றுக்கள் வராமல் தடுக்கும். ஆனால் கீழ்வரும் நோய்நிலைகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

​அசிடிட்டி பிரச்சனை

ஆரஞ்சு பழத்தில் நிறைய ஊட்டசத்துக்களும் மினரல்களும் இருந்தாலும் அதிக அளவில் இருப்பது சிட்ரிக் அமிலமே அதிகமாக இருக்கிறது.

அதிக அமிலத்தன்மையின் காரணமாக சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் ஏற்கனவே நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் ஆரஞசு பழத்தை சாப்பிடாதீர்கள்.

மூட்டுவலி பிரச்சினை

மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் ஆரஞசு பழம் சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு புதிய செய்தியாக இருக்கலாம். மூட்டு வலி வயதானவர்களுக்கு அதிகமாக உண்டாகும். இப்போது எல்லா வயதினருக்குமே வருகிறது.

ஊட்டச்சத்துக்கள் குறைபாடு மட்டுமின்றி இன்ஃபிளமேஷன்களாலும் தான் இந்த மூட்டுவலி பிரச்சினை உண்டாகிறது. ஏற்கனவே இன்ஃபிளமேஷன்களால் மூட்டுகளுக்கு இடையே உள்ள தசைநார்கள் மற்றும் திசுக்கள் பாதிப்படைந்து இருக்கும் போது ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வலி அதிகரிக்கும்.

​குடல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள்

ஏற்கனவே அல்சர் மற்றும் பிற குடல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக் கூடாது.

அப்படி சாப்பிடும்போது குடலில் அமிலச் சுரப்பு அதிகரித்து கடுமையான வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, இரைப்பையில் அமில உற்பத்தி (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கும்.

மலச்சிக்கல்

ஆரஞ்சு் பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. பொதுவாக நார்ச்சத்துக்கள் அஜீரணக் கோளாறை சரிசெய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

ஆனால் ஆரஞ்சு பழத்தைப் பொருத்தவரையில் அதில் நார்ச்சத்து நிறைய இருந்தாலும் அமிலத் தன்மை அதிகம் என்பதால் அசிடிட்டி, வயிற்று வலி ஏற்படுவதோடு மலத்தை இறுகச் செய்து, மலச்சிக்கலை மேலும் கடுமையாக்கலாம். அதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆரஞ்சை தவிர்ததுவிடுங்கள்.

​சிறுநீரகக் கோளாறு

சிறுநீரகக் கோளாறு என்றவுடன் சிறுநீரக செயலிழப்பு என்று மட்டும் நினைக்காதீர்கள். சிறுநீரகப் பாதை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்களும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இல்லையென்றால் இது வலியை மேலும் கடுமையாக்கும். சிறுநீர்ப் பாதையில் எரிச்சலையும் உண்டாக்கலாம்.

​பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

நம்முடைய பற்கள் மிகவும் சென்சிடிவ்வானவை. பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சொத்தை பல், ஈறுகள் தொடர்பான பிரச்சினை, ஈறு வீக்கம், ரத்தம் வடிதல், பல் கூச்சம் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதைத் தவிர்த்தல் நல்லது.

பல் கூச்சம் உள்ளவர்களுக்கு இதிலுள்ள அமிலத் தன்மையால் கூச்சம் அதிகமாகும். அதோடு பற்களில் உள்ள கால்சியத்துடன் இந்த சிட்ரிக் அமிலமும் சேரும் போது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று வேகமாக உண்டாகி பல் வலியையும் அதிகப்படுத்தும்.

Related Posts

Leave a Comment