”மின்சாரக் கட்டணத்தை 10 தொடக்கம் 20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இந்த வருடத்தின் 2ஆவது மின் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரித்துள்ளோம்.
எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அதனை கையளிக்கவுள்ளோம். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம், மற்றும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனுமதிகள் எமக்கு கிடைத்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப செயற்படக்கூடாது. ஆனால் மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் அவ்வாறு செயற்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது” இவ்வாறு தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.