92
தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
தோல், விதை நீக்கிய மாம்பழம் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – ½ கப்
முந்திரி, பாதாம், திராட்சை – ¼ கப்
ஏலக்காய், குங்கமப்பூ – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சி கொள்ளவும். பின்பு இதில் ரவையை போட்டு பொன்னிறத்தில் வறுத்தெடுக்க வேண்டும். பின்பு இந்த ரவையுடன் சர்க்கரை மற்றும் அரைத்த மாம்பழகூலை சேர்த்து கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக தண்ணீர் வற்றி வரும்போது ஒரு கடையில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு தாளித்து கேசரியில் குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மாம்பழ கேசரி தயார்.