இந்த மீல்மேக்கர் பெப்பர் கிரேவி, நெய் சாதத்திற்கு மட்டுமின்றி குஸ்கா, சூடான வெள்ளை சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடனும் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை சாப்பிடுவதற்கு சிக்கன் கிரேவி போல் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி இந்த கிரேவி செய்வது ரொம்பவே ஈசி. சரி வாங்க இப்போது இந்த மீல்மேக்கர் பெப்பர் கிரேவி எப்படி செய்வது என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
மீல்மேக்கர் பெப்பர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 2 கப்
மிளகு – 1 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 3
கிராம்பு – 4
பட்டை – 1 துண்டு
பெருஞ்சீரகம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய தக்காளி – 1
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மீல்மேக்கர் பெப்பர் கிரேவி செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த மீல்மேக்கரை போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். இதனுடன் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை அதிலிருந்து இறக்கி விடுங்கள். 5 நிமிடம் மீல்மேக்கர் அந்த சூடான தண்ணீரிலே வையுங்கள். பிறகு அதிலிருந்து மீள் மேக்கரை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் இரண்டு முறை கழுவுங்கள். இப்போது அதிலிருந்து நீரை பிழிந்து எடுக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மிளகு, பெருஞ்சீரகம், வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நிறம் மாறும் வரை அதை வதைக்கி பின் ஆற வையுங்கள். அவை நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, கொஞ்சமாக பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளுங்கள். பிறகு அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போன பிறகு, அதில் மஞ்சள் தோல் மல்லி தூள் ஏற்கனவே அரைத்து வைத்த பொடி உங்கள் தேவைக்கேற்ப உறுப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.
கடைசியாக அதில் மீல்மேக்கரை சேர்த்து நான்கு கிளறி விடுங்கள். இப்போது, கிரேவி பதத்திற்கு ஏற்றவாறு, அதில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்த பிறகு அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில், மீல்மேக்கர் பெப்பர் கிரேவி ரெடி!!