41
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 20ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனையானது.
வெள்ளி விலை முதல்முறையாக கிலோ ரூ.1 லட்சத்தைக் கடந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1.01 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
21ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, 54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 6,860 க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.