கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

by Editor News

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து 49 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், சின்னமுட்டம், கோவளம், மணக்குடி தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்றும், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கை காரணமாக அவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வாங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாகவும் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment