ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்..

by Editor News

ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/4 கப்
மைசூர் பருப்பு – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
சின்ன வெங்காயம் – 6-7 முருங்கைக்காய் – 1
புளிச்சாறு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 3-4 ஸ்பூன்
சர்க்கரை – கால் ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் செய்ய முதலில், மேலே சொல்லப்பட்ட எல்லா பருப்புகளையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் அதை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்த பருப்புகள், சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மிதமான தீயில் வேக வையுங்கள்.

இப்போது, பருப்பு முக்கால் பதத்திற்கு வெந்ததும் அதில் எடுத்து வைத்த முருங்கைக்காய் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் சர்க்கரை, புளிசாறு மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பிறகு 20 முதல் 25 நிமிடம் வரை கொதிக்க வையுங்கள்.

இது ஒரு புறம் இருக்க நீங்கள் மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊத்தி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளுங்கள். இப்போது இதை பக்கத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து ஒரு முறை கிளறிவிடுங்கள். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் தயார்!!

Related Posts

Leave a Comment