மன்னர் சார்லஸை பின்னுக்குத் தள்ளிய பிரித்தானிய பிரதமர்!

by Editor News

புகழ்பெற்ற நாளிதழான சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் முன்னேறியுள்ளனர்.

குறித்த தம்பதியினர் கடந்த ஆண்டு 275-வது இடத்தில் இருந்துள்ளனர்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் படி, ரிஷி சுனக் 2022-23 இல் ஜிபிபி 2.2 மில்லியனை ஈட்டியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அக்ஷதா மூர்த்தியின் தந்தை நாராயண மூர்த்தியின் ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸில் அக்ஷதா பங்கு வைத்திருப்பதே இவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது. இதேவேளை இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment