தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
கடலை மாவு – 1 1/2 ஸ்பூன்
அரிசி மாவு – 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 கப்
பிரட் துகள்கள் – 1 கப்
(பொடியாக பொடிதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு
கருவேப்பிலை – 1 கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய முதலில், உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்றாக கழுவி குக்கரில் மூன்று விசில் வரும் வரை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நன்கு மசித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளுங்கள். இப்போது பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தட்டில் பிரட் துகள்கள் போட்டு அதன் மீது தட்டி வைத்துள்ள மாவை புரட்டி போட்டு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி!!