சமீபத்தில், கேரளாவில் ஒரு இளம் செவிலியர் அரளிப்பூ மற்றும் இலையை லேசாக மென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கேரள அரசு, கோவில்களில் மாலையாக பூஜைக்கு மட்டுமே இந்த அரளிப்பூ பயன்படுத்த வேண்டுமே தவிர, நைவேத்தியத்திற்கும் பக்தர்களுக்கு கொடுக்கும் பிரசாதங்களிலும் பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. அந்தவகையில், இப்போது அரளி செடியின் குணங்கள் மற்றும் அதன் ஆபத்துகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
அரளி செடி பயன் என்ன?
அரளிச்செடியை பலர் தங்களது வீட்டிலும், சாலை ஓரங்களிலும் வளர்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், சிவப்பு நிற அரளியில் காற்றை சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளது. இந்த செடி ஆனது காற்றில் இருக்கும் மாசுகளை வடிகட்டி சுத்தமான காற்றை நமக்கு அனுப்புவதால், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
அரளிபூ வகைகள்:
அதுபோல, அரளியில் பலவகைகள் உள்ளன. அவை சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை. ஆனால், இவற்றில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிபூ தான் அதிக விஷத்தன்மை உடையது.
கோவில் பூஜைக்கு அரளிப்பூ:
அரளிப்பூவை அதிகமாக கோவில்களில் பூஜைக்கு மட்டுமே தான் பயன்படுத்துவார்கள். அதுவும் சிவன் கோவில்களில் மட்டும் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூவை கோவில்களில் பிரசாதமாகக் கொடுக்கப்படுவதால் அந்த சமயம் தவிர, பிற சமயங்களில் பெண்கள் இந்த பூவை வைப்பதில்லை. மேலும், கோவில்களில் திருநீறு, குங்குமம், பொங்கல் நைவேத்யம் ஆகியவற்றில் மற்ற பூக்களுடன் இந்த பூவும் சேர்க்கப்படுகிறது.
மருந்தாக அரளிப்பூ:
அரளிப்பூவானது, ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தோல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் இன்னும் நிறைய நன்மைகளை வழங்குகிறது.
அரளி பூ மற்றும் இலையின் ஆபத்து என்ன?
அரளி பூவில் மஞ்சள் நிறம் மட்டும் விஷத்தன்மை அல்ல, அரளி குடும்பத்தின் அனைத்தும் நிறமும் விஷத்தன்மை உடையது தான். எனவே, அவற்றை ஒருபோதும் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டாம்.
உங்களுக்கு தெரியுமா..அரளியை சாப்பிட்டால் உடனே கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படும். இதனால் உயிர் கூட போகலாம். அதுமட்டுமின்றி, அரளி பூ அல்லது இலையை சாப்பிட்டாலோ, நுகர்ந்து பார்ப்பதாலோ கூட குமட்டல், டயேரியா, வாந்தி, மயக்கம், சருமத் தடிப்புகள், தலைசுற்றல், மெதுவான மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்றவை ஏற்படும். முடிவில் மரணம் தான்.