பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா.
தற்போது ராதிகாவின் கர்ப்பம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த நிலையில், அனைவரும் கோபியை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேற கூறியுள்ளனர்.
ஈஸ்வரியும் வீட்டைவிட்டு கோபியை வெளியே செல்ல கூறினார். ஆனால் எதிர்பாராத டுவிஸ்ட் ஒன்று அரங்கேறியுள்ளது. என்னவெனில் கோபி ராதிகாவுடன் சேர்ந்து ஈஸ்வரியும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
வெளியேறிய ஈஸ்வரியை பாக்கியா எதுவும் கூறி தடுக்காமல் தற்போது கெத்தாக நிற்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
எப்பொழுதும் மாமியாருக்காக விட்டுக்கொடுத்த சென்ற பாக்கியா இந்த முறை சுயமாகவும், துணிச்சலாகவும் முடிவு எடுத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.