”நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி மத நிந்தனை செய்வதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை , நான் மத ரீதியாக பேச தொடங்கினால் நான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி இல்லாதவன் ஆகி விடுவேன். நான் ஒருபோதும் அப்படி செயல்படுவது இல்லை. என்னை இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் போல சித்தரிக்கிறார்கள்.
இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் எனக்காக வாக்களிப்பார்கள். நான் மத ரீதியாக பேசவில்லை என்பது அவர்களுக்கு புரியும். நான் இந்து, முஸ்லிம் பற்றி பேசுவது இல்லை. இதனை எனது வாக்குறுதியாகவே மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.