செம்பருத்திப் பூவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இவை பல வண்ணங்களில் உள்ளது. மேலும் பலர் தங்களது வீட்டு தோட்டங்களில் இந்த செடியை வளர்ப்பார்கள். செம்பருத்தி பூ முடிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் பூக்கள் நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவேளை உங்களுக்கு செம்பருத்தி பூவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், அதன் சில அற்புதமான நன்மைகளைப் பற்றி இப்போது இந்த கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும்:
இரத்த சோகை பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டிருக்கிறீர்களா..? செம்பருத்தி பூ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், உண்மையில், இந்த பூவில் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது. இது உடலில் உள்ள இரத்த சோகை பிரச்சினையை நீக்குகிறது. இதற்கு செம்பருத்தி மொட்டுகளை அரைத்து அதன் சாற்றைத் தொடர்ந்து குடித்து வந்தால் நன்மை பயக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும்:
நீங்கள் நீண்ட காலமாக உடல் எடையை குறைக்க விரும்பினால், செம்பருத்தி மலர் நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கு செம்பருத்தி இலைகளின் தேநீரை செய்து குடிக்கலாம். செம்பருத்தி தேநீர் உங்களுக்கு ஆற்றலைத் தரும் மற்றும் நீண்ட நேரம் பசியை உணராமல் வைக்கும். இது தவிர, உங்கள் செரிமானமும் மேம்படும். அதுமட்டுமின்றி, இதன் பூவை சாப்பிட்டால் கொழுப்பு குறையும். இது எடை குறைவதற்கு வழிவகுக்கும்.
சரும அழகை பராமரிக்க:
வயது அதிகரிக்கும்போது, முதுமையும் அதிகரிக்கும். இதனால், பலர். கவலைப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள் ரொம்பவே கவலையடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், செம்பருத்தி பூ உங்களுக்கு நிச்சயமாக உதவும். எப்படியெனில், இதன் பூவில் அதிக அளவு வயதான எதிர்ப்பு கூறுகள் உள்ளன. அவை வயதான காலத்திலும் உங்கள் அழகை பராமரிக்க பெரிதும் உதவும். கூடுதலாக, ஃப்ரீ ரேடிக்கல்களையும் அகற்றும். எனவே, முதுமையிலும் இளமையாகத் தோன்ற செம்பருத்திப் பூவைப் பயன்படுத்துங்கள்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், செம்பருத்தி பூ நிச்சயமாக உங்களுக்கு உதவும். ஏனெனில், இந்த பூவில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளது. அவை உங்கள் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்பாட்டில் வைக்கும். இதற்கு நீங்கள் செம்பருத்தி டீ குடிப்பது மிகவும் நல்லது.
சளி மற்றும் இருமலுக்கு நல்லது:
செம்பருத்தி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும், நீங்கள் அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதில் இருந்து நிவாரணம் பெற நீங்கள் செம்பருத்தி பூக்களை சாப்பிடவும். மேலும், இதன் பூக்கள் தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.