வாழை இலையில் சாப்பிட்டால் என்ன பலன்..

by Editor News

பொதுவாகவே தமிழர்களின் அனைத்து பாரம்பரிய விழாவிலும் வாழை இலையில் உணவு பரிமாறப்படுவது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டுவரும் வழக்கமாக இருக்கின்றது.

நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நிச்சயம் தகுந்த காரணம் இருக்கும். அவர்கள் எந்த ஒரு விடயத்தையும் வெறுமனே அழகுக்காகவோ சம்பிரதாயத்துக்காவோ மாத்திரம் செய்வது கிடையாது.

வாழை இலையும் வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள்.

இது சிறந்த நச்சு முறிப்பானாக செயற்படுகின்றது. வாழையிலையின் மேல் காணப்படும் பச்சைத் தன்மை குளோரோபில் எனும் வேதிப்பொருளால் ஆனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மிகச்சிறந்த கிருமி நாசினியாக தொழிற்படுகின்றது.இது பாக்டீறியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை கொண்டது.

வாழை இலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய்கள் இன்றி நீண்ட நாட்கள் ஆராக்கியமாக வாழ முடியும்.

மேலும் வாழை இலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால், செல் சிதைவு ஏற்படுததவை தடுத்து நீண்ட நாட்கள் இளமையை தக்கவைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

வாழை இலையில் உள்ள குளோரோபில், வயிற்றுப் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணம் கொடுக்கும்.

வாழை இலை, புற்றுநோயை தடுக்கும் தன்மை கொண்டுள்ளது.வாழை இலையில் பொதி செய்யப்படும், காய்கள் பழங்கள், பூக்கள் போன்றவை நீண்ட நேரத்துக்கு புதிது போல் இருக்கும்.

வாழை இலையில் சாப்பிடுவதால் சிறுநீரக கல் மற்றும் சிறுசீரம் சார்ந்த பிரச்சிகைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

Related Posts

Leave a Comment