130
இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இந்த தகுதியை பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன்படி,இந்த தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்கொட்லாந்து மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.