இன்றைய பிஸியான நவீனவாழ்கை முறையில், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இப்படியிருக்க, உடலில் இருந்து அடிக்கடி விந்தணுக்கள் வெளியேறுவது உடல் வலிமையைக் குறைக்கும்.
உடலில் இருந்து விந்தணுக்களை வெளியேறாமல் போனால் நல்லதா? கெட்டதா? என்பது போன்ற பல கேள்விகள் ஆண்களிடம் இருக்கின்றன. இன்னும் சிலருக்கோ இயல்பாகவெ விந்தணுக்கல் வெளியேறினால் அதன் அளவு குறைந்துவிடும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்பது போன்ற தவறான எண்னங்கள் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது.உங்களின் கேள்விகளுக்கு பாலியல் நிபுணர்கள் கூறும் விளக்கம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இது குறித்த தகவல்கள் பரவலாக உள்ளன. ஆனால் அதில் எல்லாமும் உண்மையான தகவல் கிடையாது. உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவது போலவே, நம் பிறப்புறுப்பு, பாலியல் சார்ந்த சந்தேகங்களுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை அணுக வேண்டும்.
இப்போது விந்தணு வெளியேறுதல் தொடர்பான சந்தேகங்களுக்கு பாலியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. முதலில், தூக்கத்தில் விந்தணு வெளியேறினால் அதன் எண்ணிக்கை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்பது போன்றவைகள் உணமை இல்லை. அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை.
2. ஒருவர் உடலுடம் உரையாட வேண்டும். உங்கள் உடல் என்ன சொல்கிறது, அதன் தேவை என்ன என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். விந்தணு வெளியேற்றப்பட வேண்டிய நேரத்தில் அதை செய்வதில் எந்தவித தவறும் இல்லை. உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். உடலிலிருந்து விந்தணு வெளியேற்றப்பட வேண்டும் என்றால் அது நிகழ்வது நல்லதுதான்.
3. இருப்பினும், உடல்ரீதியிலாக பலவீனமாக இருப்பவர்கள்,ஆஸ்துமா இருப்பவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடும் பணிச்சூழல் இருப்பவர்கள் ஆகியோர் உடலில் இருந்து அதிக அளவு விந்து வெளியேறுவது ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதனால் இவர்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப விந்தணு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது சரியானது ஆகும்.
4. மேற்சொன்ன பிரச்சனைகள் இல்லாதவர்கள் உடலில் இருந்து அதிக அளவில் விந்தணு வெளியேறினால் பாதிப்பு இல்லையா என்று கேட்டால், பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றனர்.
5. பதின்வயதினர் முதல் பெரியவர்கள் வரை இரவு தூக்கத்தில் விந்தணு வெறியேறுதல் இயல்பானது. புதிய அணுக்கள் உருவாவதற்கான நிகழ்வு இது. இதற்கும் உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.