தெற்கு பிரேசிலில் கனமழை – நீர்மின் அணை உடைந்து 30 பேர் உயிரிழப்பு!

by Editor News

தெற்கு பிரேசிலில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்மின் அணை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை உடைந்ததால் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் அலை ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அணை அமைந்துள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 15,000 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 500,000 மக்கள் மின்சாரம் மற்றும் சுத்தமான தண்ணீரின்றி மாநிலம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணையானது கோடிபோரா முனிசிபாலிட்டி மற்றும் பென்டோ கோன்சால்வ்ஸ் நகருக்கு இடையே அமைந்துள்ளது,

மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அரசின் உதவிகளையும் அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment