உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்கிறீர்களா? தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..

by Editor News

உடல் எடை அதிகமாக இருந்தால் இதனால் நாம் பெரும் சிரமப்படுகின்றோம் இதனால் நாம் விரும்பிய உடைகளை போட முடியாது.

வெளி இடங்களில் ஒரு கூச்சசுபாவத்துடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இந்த காரணத்தினால் பலரும் டயட்டில் இருந்து தங்கள் எடையை குறைத்து கொள்வார்கள்.

அந்த பழக்கங்களில் ஒன்று இரவு உணவை தவிர்ப்பது. இந்த பழக்கம் குறுகிய கால பலன்களை கொடுத்தாலும், அது நீண்ட காலத்திற்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளையும் கொடுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உடல் மெட்டாபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பசி மற்றும் ஆசைகளையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.

இதை தவிர நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது. அத்துடன், தூக்கமின்மை, உடல் சக்தி குறைபாடு போன்றவையும் ஏற்படும்.

எனவே, சரிவிகித உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதுதான், உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment