மஞ்சள் என்பது எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும். ஒவ்வொரு உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை பற்றி சொல்ல வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும அழகுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மஞ்சளை முகத்தில் தடவினால் முகம் அழகாகும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சில சமயங்களில் அது பிரச்சனைகளையும் உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?
மஞ்சளை முகத்தில் தடவினால் நல்ல பலன்கள் தரும். ஆனால், மஞ்சள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் சில சமயங்களில், மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவுவதால் தான் இப்படி ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும் மஞ்சளை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது.
மீறினால் தோல் அலர்ஜி, எரிச்சல், அரிப்பு, சிவந்த பருக்கள் போன்றவை வரும் என்று கூறப்படுகின்றது. ஆகையால் இப்போது மஞ்சளை நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இங்கு பார்க்கலாம்.
மஞ்சளை முகத்தில் நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக பால் அல்லது தயிரில் கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதுமட்டுமின்றி, மஞ்சளுடன் சந்தனப் பொடியையும் சேர்த்து முகத்தில் தடவினால் முகம் பொலிவாக இருக்கும்.