தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் – 1/2 கிலோ
மஞ்சள் – 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மரினேட் செய்ய தேவையானவை :
கடலை மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து அதன் இலைகளை நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் காலிஃப்ளவர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை மட்டும் தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
பின் அதனுடன் வேக வைத்த காலிஃப்ளவரை துண்டுகளாக்கி இந்த கலவையில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
காலிஃப்ளவரில் மசாலாக்கள் நன்கு இறங்க வேண்டும். எனவே இதை குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த காலிஃப்ளவரை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
காலிபிளவர் வெந்து பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து மற்றொரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மொறுமொறு காலிபிளவர் 65 அனைவருக்கும் சூடாக பரிமாற ரெடி.