தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
அரைக்க தேவையானவை :
பூண்டு – 3 பல்
இஞ்சி துண்டு – 1
வரமிளகாய் – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி துண்டு, வரமிளகாய், சோம்பு, கருப்பு மிளகு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு பின்னர் அதை சிறு நீளத் துண்டுகளாக நறுக்கி உடனே நீரில் போட்டுக் கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு வறுக்கவும்.
வாழைக்காய் நன்கு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக்கொள்ளவும்.
கடுகு வெடித்ததும் அதில் பெருங்காயத் தூள் போட்டு கலந்து பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்.
அதன் பச்சை வாசம் போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்கு கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.
பின்னர் அதை சில நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் ரெடி.