கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா.!?

by Editor News

பொதுவாக கோடை காலத்தில் நம் உடலில் வெப்பநிலை அதிகரித்து நீர்ச்சத்து குறைவதால் பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளை குறைக்கவும், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பல வகையான குளிர்ச்சியான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களை மக்கள் தேடி வருகின்றனர். இதில் குறிப்பாக நுங்கு நம் உடலில் வெப்பநிலையை சீர்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏழைகளின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்திலிருந்து நுங்கு கிடைக்கிறது. பனை மரத்தில் இருக்கும் இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்ததாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நுங்கு மற்றும் பதநீர் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் எளிதாக கிடைப்பதால் இதை மக்கள் விரும்பி வருகின்றனர்.

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வேர்க்குரு, வியர்வை நாற்றம், உடல் உஷ்ணம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரக கற்கள் போன்ற பல வகையான உடல் சூட்டு பிரச்சனைகளை சரி செய்கிறது. நுங்கில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு சத்து போன்ற பல வகையான சத்துக்கள் இருப்பதால் இது கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் சத்து குறைபாடு நோயை சரி செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

Related Posts

Leave a Comment