கக்குவான் இருமல் கட்டுப்படுத்துவது எப்படி.. ஆயுர்வேத குறிப்புகள்..!

by Editor News

கக்குவான் இருமல் என்பது தீவிர நிலை என்பதாலே முன்கூட்டியே தடுக்கும் வழிமுறையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. TDaP (Tetanus, Diphtheria and Pertussis- டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ்) என்று அழைக்கப்படும் இவை கக்குவான் இருமலை தடுக்க செய்யும். சளி இருமலுடன் வரும் இந்த கக்குவான் இருமல் ஒரு வித சத்தத்தை உண்டு செய்வதை கொண்டு அடையாளம் காணப்படுகிறது. இந்த கக்குவான் இருமலை நிர்வகிக்க ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

கக்குவான் இருமல் என்றால் என்ன?​

கக்குவான் இருமல் என்பது பெர்டெடெல்லா பெர்டுசிஸ் என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. தீவிரமாக தொற்றும் தன்மையுடைய இது வயது பேதமில்லாமல் அனைவரையும் பாதிக்க கூடியது. குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனினும் தடுப்பூசி போடப்படாத கைக்குழந்தைகள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். இந்த இருமல் கட்டுப்படுத்த முடியாத அளவு இருமலை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க கடினமாக இருக்கும்.

ஆயுர்வேதத்தில் கக்குவான் இருமல் என்பது கசாவுடன் தொடர்புடையது. ஆயுர்வேதத்தில் கசா என்பது..
தொண்டையிலும் வாயிலும் முள் இருப்பது போன்ற உணர்வு உண்டு செய்யும்.
தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தும்
உணவை விழுங்குவதில் சிரமமாக இருக்கும்
இந்த இருமல் நிலையில் வாத தோஷத்தை நீக்குவதாகும். ஒரு வகை வாதம் அதிகரித்த கபத்தால் மார்பு மற்றும் தலை பகுதியில் தடைபடுகிறது. உடலின் உள்ளே உள்ள வாதம் பாயும் தன்மையை கொண்டிருப்பதால் இந்த கசா நிலையில் ஸ்ரோட்டாக்கள் ஆனது உடலின் மேல் பகுதியில் தடுக்கப்பட்டு வறண்ட அல்லது சளி இருமலை கொடுக்கும்.

கக்குவான் இருமலை உண்டு செய்யும் பெர்டெடெல்லா பெர்டுசிஸ் என்னும் பாக்டீரியா நுரையீரலில் நுழைகிறது. இது வீக்கம், சுவாசப்பதை குறிப்பாக மூச்சுக்குழாய், மூச்சுக்குழற்கவரில் எரிச்சல் போன்றவற்றை உண்டு செய்கிறது. இதனால் பல்வேறு சுவாச சிக்கல்கள் உண்டாகிறது. சுவாசக்குழாயில் உள்ள சிலியாவுடன் இணைக்கப்பட்டு சிலியாவை அழிக்கும் நச்சை உண்டு செய்கிறது. இதனால் காற்றுப்பாதைகள் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தீவிரமாக தொற்றக்கூடியது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம் அசுத்தமான காற்றின் மூலமும் இவை பரவுகிறது.

கக்குவான் இருமல் அறிகுறி வெளிப்பட 6 முதல் 10 நாட்கள் வரை ஆகும். எனினும் மூன்று வாரங்கள் வரை சிலர் அறிகுறியில்லாமலும் இருக்கலாம். இருமலுக்கு பிறகு மூச்சு விடும் போது வூப் லி பெரிதாக கேட்கும். இது குழந்தைகளிடம் நன்றாக வெளிப்படும்.

தும்மல்
காய்ச்சல்
வாந்தி
மூக்கு ஒழுகுதல்
நிலையான வறண்ட இருமல்
அதிக சோர்வு
தொண்டை புண்
நீரிழப்பு
மூச்சு விடுதலில் சிரமம்
வாயை சுற்றி நீல நிறமாக மாறுதல் போன்றவை இருக்கும்.
ஆயுர்வேத முறையில் கக்குவான் இருமல் சிகிச்சைக்கு செரிமான சக்தியை மேம்படுத்துதல், ஊட்டமளிக்கும் சிகிச்சை, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுதல் போன்றவை உதவியாக இருக்கும். மேலும் உடலில் வாத, பித்த, கப தோஷம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும்.

கக்குவான் இருமலுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வீட்டு வைத்தியம் :

தேன் – கக்குவான் இருமலுக்கு தேன் பயன் உள்ளதாக சொல்லப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் ஒரு டம்ளர் எடுத்து அதில் தேன் கலந்து குடித்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி சாறு – கக்குவான் இருமலுக்கு இஞ்சி சாறு பயன்ள்ளதாக இருக்கும். இஞ்சி தேநீராக குடிக்கலாம். இஞ்சி சாறு தேன் கலந்து குடிக்கலாம்.
கற்றாழை சாறு – ஆயுர்வேதத்தில் கக்குவான் இருமலுக்கு தேன் கலந்த கற்றாழை சாறு பரிந்துரைக்கப்படுகிறது.
கிராம்பு – கிராம்பு தொடர்ச்சியான இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்
துளசி இலைகள்- ஆயுர்வேதத்தில் துளசி இலைகள் கக்குவான் இருமலுக்கு பயனுள்ள மருந்தாக சொல்லப்படுகிறது.
புகைப்பழக்கம் – பெரியவர்களுக்கு புகைப்பழக்கம் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும் . குழந்தைகள் இந்த பாதிப்பை கொண்டிருந்தால் அவர்கள் முன்னிலையில் புகைப்பிடிக்க கூடாது.
​சுவாச பயிற்சிகள் – தொடர்ந்து சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது கக்குவான் இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
கக்குவான் இருமல் என்பது இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். கடுமையானதாக இருந்தால் இன்னும் சில காலம் தொடரலாம். கக்குவான் இருமலுக்கு இந்த வீட்டு வைத்தியம் ஆரம்பத்திலிருந்தே பின்பற்றினால் இதை நிர்வகிக்கலாம். தீவிரமாக இருப்பதோடு அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்தால் முழுமையான நிவாரணம் பெற மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

குறிப்பு – கக்குவான் இருமலுக்கு பொதுவான எளிய வைத்தியம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள்து. இதை சுய வைத்தியமாக பின்பற்றக்கூடாது. இது பொதுவான வைத்தியமே. மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுவது விரைவான நிவாரணம் அளிக்கும்.

Related Posts

Leave a Comment