முகத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, முகத்திற்கு சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷ்க்கு பதிலாக இயற்கையாகவே முகம் பிரகாசமாக இருக்க என்னென்ன பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
தயிர்:
தயிர் இயற்கையாகவே முகத்தைப் பாதுகாக்கிறது. இதற்கு தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல் முக சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவவும். காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் உங்கள் முகம் உங்கள் முகம் மென்மையாக மாறும்.
முல்தானி மெட்டி:
முல்தானி மெட்டியும் முகத்தை இயற்கையாகவே, பொலிவடைய செய்யும். இதற்கு, ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண நீரில் கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.