63
மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரித்தார்
அதன்படி மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் விளிம்பில் நிற்கிறது. அந்தப் பிராந்திய மக்கள் முழு வீச்சு போரை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.
இத்தருணத்தில் உடனடியாக பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றும் பழிக்குப் பழி என இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலைக் கண்டிக்கிறோம் ஆகையால் வெறுப்புகளை முன்னெடுக்காமல் நிறுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.