தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி – 1 கிலோ கிராம்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
துருவிய தேங்காய் – 2
டேபிள் ஸ்பூன் பூண்டு – 3
பல் தயிர் – 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
மிளகாய் தூள் – ½ தே.கரண்டி
கரம் மசாலா – ½ தே.கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 தே.கரண்டி
கொத்தமல்லி விதைகள் – 2 தே.கரண்டி
சீரகம் – ½ தே.கரண்டி
எண்ணெய் – 3 தே.கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர் – சிறிதளவு
உப்பு – தேவையாள அளவு
செய்முறை
முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவில் துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து சூடானதும் கொத்தமல்லி விதைகள், சீரகம், துருவிய தேங்காய் மற்றும் பூண்டு என்பவற்றை போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரை நன்றாக வேகவைக்க வேண்டும்.
குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் பாரம்பரிய முறையில் சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.