முதலில் உங்கள் உடலில் இருந்து C.R.A.Pஐ வெளியேற்ற வேண்டும்?
அது என்ன C.R.A.P என்று யோசிக்கின்றீர்களா? அது வேறெதுவும் அல்ல, C என்பது (Caffeine) காஃபின், R என்பது (Refined Sugar) சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, A என்பது (Alcohol) மது, மற்றும் P என்பது (Processed Food) பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவற்றை முற்றிலும் தவிர்த்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் உடல்நிலையை நீங்கள் அடையாளம்.
மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் :
மீன் எண்ணெய் என்பது பல நல்ல ருசியான மீன்களில் காணப்படுகிறது. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒரு சத்தான உணவாக உள்ளது. இது அனைவருக்கும் அவசியம், இது உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். சந்தையில் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் நிறைய உள்ளன. இந்த சப்ளிமெண்ட்ஸ் உங்களுக்கு தட்டையான வயிற்றுக்கு வழிவகுக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்
ஆரோக்கியமான காலை உணவின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம், மேலும் இது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணமும் உள்ளது. காலை உணவை எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும், மற்றும் நம் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
இரவு 8.00 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும் :
காலை உணவை அரசனைப் போலவும், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்பது பழமொழி. இரவு உணவு என்பது முடிந்தவரை இலகுவாக இருக்க வேண்டிய ஒன்று, ஏனெனில் அது உங்கள் செரிமான அமைப்பு ஓய்வெடுக்க தயாராகும் நேரமாகும். எனவே இரவு 8:00 மணிக்குப் பிறகு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
ப்ராசஸ் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பிற பானங்களை குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல பச்சையாக காய்கறிகளை உட்கொள்வதை காட்டிலும், அதை சற்று வேக வைத்து உட்கொள்வது உங்கள் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அதிக அளவில் உப்பினை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தண்ணீரையும் போதுமான அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது, திட உணவுகளை காட்டிலும் திரவ உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பொழுது உங்களுக்கு தட்டையான வயிற்றைப் பெற மிக குறுகிய நாட்களே போதுமானதாக இருக்கும். இதை ஏழு நாட்களுக்கு மட்டும் தொடராமல், உங்கள் உணவு பழக்க வழக்கத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.