வினிகர்:
பித்தளைப் பாத்திரங்களை சுத்தம் செய்வதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முதலில், வினிகரை பாத்திரத்தில் ஊற்றி, அவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அவ்வளவுதான் இப்போது பித்தளை பாத்திரம் புதிதாக மின்னும்.
எலுமிச்சை:
எலுமிச்சை மற்றும் உப்பின் பண்புகள் பித்தளை பாத்திரங்களை புதியதாக மாற்றும். இதற்கு எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, பித்தளை பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து, பிரஷ் உதவியுடன் அதை சுத்தம் செய்யவும். இப்படி செய்தால் பித்தளை பாத்திரம் பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.
சமையல் சோடா:
சமையல் சோடாவைப் பயன்படுத்தி பழைய பித்தளைப் பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்யலாம். இதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிது எலுமிச்சை சாறுடன் கலந்து, பித்தளை பாத்திரங்களை பிரஷ் மூலம் சுத்தம் செய்து, பின் தண்ணீரை கொண்டு கழுவினால், பாத்திரம் புதியது போல் ஜொலிக்கும்.