1973 மற்றும் 2018 க்கு இடையில் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மனித இனப்பெருக்கம் புதுப்பிப்பு இதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சராசரி மனித விந்தணுக்களின் செறிவு 51.6 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 62.3 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் 1973 மற்றும் 2018 க்கு இடையில் வெளியிடப்பட்ட 223 ஆவணங்களின் பகுப்பாய்வை மேற்கொண்ட பின்னர் இந்த ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. 53 நாடுகளில் 57,000 ஆண்களின் விந்தணு மாதிரிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது..
மனித விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதற்கு பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.